search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஹூன்டாய் இயான்"

    ஹூன்டாய் நிறுவனம் இந்தியாவில் தனது இயான் ஹேட்ச்பேக் விற்பனையை நிறுத்த முடிவு செய்திருப்பதாகவும், இதற்கு மாற்றாக புதிய கார் வெளியிடப்பட இருப்பதாக கூறப்படுகிறது. #Hyundai #automobile


    ஹூன்டாய் நிறுவனம் இந்தியாவில் இயான் ஹேட்ச்பேக் மாடலின் விற்பனையை நிறுத்த இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இயான் காருக்கு மாற்றாக ஹூன்டாய் சில மாதங்களாக சோதனை செய்து வரும் புதிய ஹேட்ச்பேக் மாடலை அறிமுகம் செய்யலாம் என கூறப்படுகிறது. புதிய ஹேட்ச்பேக் AH2 என்ற குறியீட்டு பெயரில் உற்பத்தி செய்யப்படுகிறது. 

    புதிய AH2 கார் அறிமுகமானதும், ஹூன்டாய் இயான் மற்றும் கிரான்ட் i10 விற்பனை படிப்படியாக நிறுத்தப்படும் என கூறப்படுகிறது. 2019-ம் ஆண்டு முதல் இயான் விற்பனை வெகுவாக குறைக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

    2020 எமிஷனின் படி புதிய விதிமுறைகள் அமாலகும் போது, ஹூன்டாயின் புதிய ஹேட்ச்பேக் சந்தையில் புதுவரவு காராக இருக்கும். புதிய ஹேட்ச்பேக் i10 மாடலின் பிளாட்ஃபார்மையே பயன்படுத்தும் என கூறப்படுகிறது. புதிய ஹூன்டாய் கார் சோதனை செய்யப்படும் புகைப்படங்கள் பலமுறை வெளியாகி இருக்கிறது. 



    இந்த காருக்கான பெயர் இன்னும் முடிவு செய்யப்படாத நிலையில், அடுத்த மாத வாக்கில் ஹூன்டாய் நிறுவனம் போட்டி ஒன்றை நடத்தவிருக்கிறது. இதில் வாடிக்கையாளர்களிடம் புதிய காரின் பெயரை வழங்கலாம். ஏற்கனவே வெளியான தகவல்களில் இந்த கார் புதிய பொலிவுடன் சான்ட்ரோ பிரான்டிங் கொண்டிருக்கும் என கூறப்பட்டிருந்தது. 

    இந்தியாவில் சான்ட்ரோ பிரான்டு அதிகம் பிரபலமான மாடலாக இருந்தது. 2000 ஆண்டுகளின் துவக்கத்தில் அதிக பிரபலமாக இருந்த சான்ட்ரோ, பின்னர் ஹூன்டாய் i10 மாடல் அறிமுகமானதும் சான்ட்ரோ விற்பனை குறைந்தது குறிப்பிடத்தக்கது.
    ×